| ன்நீங் கியநாள் இந்நகர் போல்வதுஓர் இயல்பினது ஆகிப் பொன்னகர் வறிதாப் போதுவர் என்பது தொல்நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின் தோரண வீதியும் தோம்அறு கோட்டியும் பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும் பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின் காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும் பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின் பத்தி வேதிகைப் பசும்பொன் தூணத்து முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின் விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும் பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின் கதலிகைக் கொடியும் காழ்ஊன்று விலோதமும் மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின் நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப் பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம்ஈ றாக வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை |