மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   538
Zoom In NormalZoom Out

 
 
இரண்டாவது
 
ஊரலருரைத்த காதை
 
(இரண்டாவது ஊரலருரைத்தபாட்டு)
நாவல் ஓங்கிய மாபெருந் தீவினுள்
காவல் தெய்வதம் தேவர்கோற்கு எடுத்த
தீவகச் சாந்தி செய்தரு நல்நாள்
மணிமே கலையொடு மாதவி வாராத்
தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வரச்
சித்திரா பதிதான் செல்லல்உற்று இரங்கித்
தத்துஅரி நெடுங்கண் தன்மகள் தோழி
வயந்த மாலையை வருகெனக் கூஉய்ப்
பயங்கெழு மாநகர் அலர்எடுத்து உரைஎன
வயந்த மாலையும் மாதவி துறவிக்கு
அயர்ந்துமெய் வாடிய அழிவினள் ஆதலின்
மணிமே கலையொடு மாதவி இருந்த
அணிமலர் மண்டபத்து அகவயின் செலீஇ
ஆடிய சாயல் ஆயிழை மடந்தை
வாடிய மேனி கண்டுஉளம் வருந்திப்
பொன்நேர் அனையாய் புகுந்தது கேளாய்
உன்னோடு இவ்வூர் உற்ற