| துஒன்று உண்டுகொல் வேத்தியல் பொதுஇயல் என்றுஇரு திறத்துக் கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும் பண்ணியாழ்க் கரணமும் பாடைப் பாடலும் தண்ணுமைக் கருவியும் தாழ்தீங் குழலும் கந்துகக் கருத்து மடைநூல் செய்தியும் சுந்தரச் சுண்ணமும் தூநீர் ஆடலும் பாயல் பள்ளியும் பருவத்து ஒழுக்கமும் காயக் கரணமும் கண்ணியது உணர்தலும் கட்டுரை வகையும் கரந்துஉறை கணக்கும் வட்டிகைச் செய்தியும் மலர்ஆய்ந்து தொடுத்தலும் கோலம் கோடலும் கோவையின் கோப்பும் காலக் கணிதமும் கலைகளின் துணிவும் நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த ஓவியச் செந்நூல் உரைநூல் கிடக்கையும் கற்றுத்துறை போகிய பொன்தொடி நங் |