| கை நல்தவம் புரிந்தது நாண்உடைத்து என்றே அலகுஇல் மூதூர் ஆன்றவர் அல்லது பலர்தொகுபு உரைக்கும் பண்புஇல் வாய்மொழி நயம்பாடு இல்லை நாண்உடைத்து என்ற வயந்த மாலைக்கு மாதவி உரைக்கும்: காதலன் உற்ற கடுந்துயர் கேட்டுப் போதல் செய்யா உயிரொடு நின்றே பொன்கொடி மூதூர்ப் பொருள்உரை இழந்து நல்தொடி நங்காய் நாணுத் துறந்தேன் காதலர் இறப்பின் கனைஎரி பொத்தி ஊதுஉலைக் குருகின் உயிர்த்துஅகத்து அடங்காது இன்உயிர் ஈவர்; ஈயார் ஆயின் நல்நீர்ப் பொய்கையின் நளிஎரி புகுவர் நளிஎரி புகாஅர் ஆயின் அன்பரோடு உடன்உறை வாழ்க்கைக்கு நோற்றுஉடம்பு அடுவர் பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து அத்திறத் தாளும் அல்லள்எம் ஆயிழை கணவற்கு உற்ற கடுந்துயர் பொறாஅள் |