மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   541
Zoom In NormalZoom Out

மணமலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக்
கண்ணீர் ஆடிய கதிர்இள வனமுலை
திண்ணிதில் திருகித் தீஅழல் பொத்திக்
காவலன் பேர்ஊர் கனைஎரி ஊட்டிய
மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை
அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்
திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள்
ஆங்ஙனம் அன்றியும் ஆயிழை கேளாய்
ஈங்குஇம் மாதவர் உறைவிடம் புகுந்தேன்
மறவணம் நீத்த மாசுஅறு கேள்வி
அறவண வடிகள் அடிமிசை வீழ்ந்து
மாபெருந் துன்பம் கொண்டுஉளம் மயங்கிக்
காதலன் உற்ற கடுந்துயர் கூறப்
பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும்பேர் இன்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிகென்று அருளி
ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி
உய்வகை இவைகொள்என்று உரவோன் அருளி