மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   544
Zoom In NormalZoom Out

பல்வளம் பழுநிய
காராளர் சண்பையில் கௌசிகன் என்போன்
இருபிறப் பாளன் ஒருமகள் உள்ளேன்
ஒருதனி அஞ்சேன் ஓரா நெஞ்சமோடு
ஆரா மத்திடை அலர்கொய் வேன்தனை
மாருத வேகன்என் பான்ஓர் விஞ்சையன்
திருவிழை மூதூர் தேவர்கோற்கு எடுத்த
பெருவிழாக் காணும் பெற்றியின் வருவோன்
தாரன் மாலையன் தமனியப் பூணினன்
பாரோர் காணாப் பலர்தொழு படிமையன்
எடுத்தனன் என்கொணடு் எழுந்தனன் விசும்பில்
படுத்தனன் ஆங்குஅவன் பான்மையேன் ஆயினேன்
ஆங்குஅவன் ஈங்குஎனை அகன்றுகண் மாறி
நீங்கினன் தன்பதி நெட்டிடை ஆயினும்
மணிப்பூங் கொம்பர் மணிமே கலைதான்
தனித்துஅலர் கொய்யும் தகைமையள் அல்லள்
பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர்
இலவந் திகையின் எயில்புறம் போ