மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   547
Zoom In NormalZoom Out

செல்லும் செம்மை தான்இலள்
மணிமே கலையொடு மாமலர் கொய்ய
அணியிழை நல்லாய் யானும் போவல்என்று
அணிப்பூங் கொம்பர் அவளொடும் கூடி
மணித்தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇச்
சிமிலிக் கரண்டையன் நுழைகோல் பிரம்பினன்
தவல்அருஞ் சிறப்பின் அராந்தா ணத்துஉளோன்
நாணமும் உடையும் நன்கனம் நீத்துக்
காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி
உண்ணா நோன்போடு உயவல் யானையின்
மண்ணா மேனியன் வருவோன் தன்னை
வந்தீர் அடிகள்நும் மலர்அடி தொழுதேன்
எந்தம் அடிகள் எம்உரை கேண்மோ
அழுக்குஉடை யாக்கையில் புகுந்த நும்உயிர்
புழுக்கறைப் பட்டோர் போன்றுஉளம் வருந்தாது
இம்மையும் மறுமையும் இறுதிஇல் இன்பமும்
தன்வயின் தரூஉம்என் தலைமகன் உரைத்தது
கொலையும் உண்டோ கொ