| ழுமடல் தெங்கின் விளைபூந் தேறலின் மெய்த்தவத் தீரே உண்டு தெளிந்துஇவ் யோகத்து உறுபயன் கண்டால் எம்மையும் கையுதிர்க் கொண்ம்என உண்ணா நோன்பி தன்னொடும் சூள்உற்று உண்ம்என இரக்கும்ஓர் களிமகன் பின்னரும் கணவிரி மாலையில் கட்டிய திரள்புயன் குவிமுகிழ் எருக்கில் கோத்த மாலையன் சிதவல் துணியொடு சேண்ஓங்கு நெடுஞ்சினைத் ததர்வீழ்பு ஒடித்துக் கட்டிய உடையினன் வெண்பலி சாந்தம் மெய்ம்முழுது உரீஇப் பண்புஇல் கிளவி பலரொடும் உரைத்தாங்கு அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம் தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும் ஓடலும் ஓடும் ஒருசிறை ஒதுங்கி நீடலும் நீடும் நிழலொடு மறலும் மையல் உற்ற மகன்பின் வருந்திக் கையறு துன்பம் கண்டுநிற் குநரும் |