| த கழிபெரு வீதியில் பொன்நாண் கோத்த நன்மணிக் கோவை ஐயவி அப்பிய நெய்அணி முச்சி மயிர்ப்புறம் சுற்றிய கயிற்கடை முக்காழ் பொலம்பிறைச் சென்னி நலம்பெறத் தாழச் செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப அற்றம் காவாச் சுற்றுடைப் பூந்துகில் தொடுத்தமணிக் கோவை உடுப்பொடு துயல்வரத் தளர்நடை தாங்காக் கிளர்பூண் புதல்வரைப் பொலந்தேர் மீமிசைப் புகர்முக வேழத்து இலங்குதொடி நல்லார் சிலர்நின்று ஏற்றி ஆலமர் செல்வன் மகன்விழாக் கால்கோள் காண்மி னோஎனக் கண்டுநிற் குநரும் விராடன் பேர்ஊர் விசயனாம் பேடியைக் காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின் மணிமே கலைதனை வந்துபுறம் சுற்றி அணியமை தோற்றத்து அ |