மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   551
Zoom In NormalZoom Out

ருந்தவப் படுத்திய
தாயோ கொடியள் தகவுஇலள் ஈங்குஇவள்
மாமலர் கொய்ய மலர்வனம் தான்புகின்
நல்இள அன்னம் நாணாது ஆங்குஉள
வல்லுந கொல்லோ மடந்தை தன்நடை
மாமயில் ஆங்குஉள வந்துமுன் நிற்பன
சாயல்கற் பனகொலோ தையல் தன்னுடன்
பைங்கிளி தாம்உள பாவைதன் கிளவிக்கு
எஞ்சல கொல்லோ இசையுந அல்ல
என்றுஇவை சொல்லி யாவரும் இனைந்துஉகச்
செந்தளிர்ச் சேவடி நிலம்வடு உறாமல்
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்
திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும்
நரந்தமும் நாகமும் பரந்துஅலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முடமுள் தாழையும்
குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும்
செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண்