| பகமும் எரிமலர் இலவமும் விரிமலர் பரப்பி வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரச் செய்கைப் படாம்போர்த் ததுவே ஒப்பத் தோன்றிய உவவனம் தன்னைத் தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு மலர்கொய்யப் புகுந்தனள் மணிமே கலைஎன். பரிதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக்கு இருள்வளைப் புண்ட மருள்படு பூம்பொழில் குழல்இசைத் தும்பி கொளுத்திக் காட்ட மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய வெயில்நுழைபு அறியாக் குயில்நுழை பொதும்பர் மயில்ஆடு அரங்கில் மந்திகாண் பனகாண் மாசுஅறத் தெளிந்த மணிநீர் இலஞ்சிப் பாசடைப் பரப்பில் பன்மலர் இடைநின்று ஒருதனி ஓங்கிய விரைமலர்த் தாமரை அரச அன் |