மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   554
Zoom In NormalZoom Out

ம் காண்புழி
மதிமருள் வெண்குடை மன்னவன் சிறுவன்
உதய குமரன் உருகெழு மீதூர்
நீயான் நடுங்க நடுவுநின்று ஓங்கிய
கூம்புமுதல் முறிய வீங்குபிணி அவிழ்ந்து
கயிறுகால் பரிய வயிறுபாழ் பட்டாங்கு
இதைசிதைந்து ஆர்ப்பத் திரைபொரு முந்நீர்
இயங்குதிசை அறியாது யாங்கணும் ஓடி
மயங்குகால் எடுத்த வங்கம் போலக்
காழோர் கையற மேலோர் இன்றிப்
பாகின் பிளவையிற் பணைமுகம் துடைத்துக்
கோவியன் வீதியும் கொடித்தேர் வீதியும்
பீடிகைத் தெருவும் பெருங்கலக்கு உறுத்துஆங்கு
இருபால் பெயரிய உருகெழு மூதூர்
ஒருபால் படாஅது ஒருவழித் தங்காது
பாகும் பறையும் பருந்தின் பந்தரும்
ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப
நீல மால்வரை நிலனொடு படர்ந்