மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   557
Zoom In NormalZoom Out

மாட வீதியின் மணித்தேர் கடைஇக்
கார்அணி பூம்பொழில் கடைமுகம் குறுகஅத்
தேர்ஒலி மாதர் செவிமுதல் இசைத்தலும்
சித்திரா பதியோடு உதய குமரன்உற்று
என்மேல் வைத்த உள்ளத் தான்என
வயந்த மாலை மாதவிக்கு ஒருநாள்
கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின்
ஆங்குஅவன் தேர்ஒலி போலும் ஆயிழை
ஈங்குஎன் செவிமுதல் இசைத்ததுஎன் செய்கென
அமுதுஉறு தீஞ்சொல் ஆயிழை உரைத்தலும்
சுதமதி கேட்டுத் துளக்குறு மயில்போல்
பளிக்கறை மண்டபம் பாவையைப் புகுகென்று
ஒளித்து அறை தாழ்கோத்து உள்ளகத்து இரீஇ
ஆங்குஅது தனக்குஓர் ஐவிலின் கிடக்கை
நீங்காது நின்ற நேர்இழை தன்னைக்
கல்என் தானையொடு கடுந்தேர் நிறுத்திப்
பல்மலர்ப் பூம்பொழில் பகல்முளைத் ததுபோல்