| பூமரச் சோலையும் புடையும் பொங்கரும் தாமரைச் செங்கண் பரப்பினன் வரூஉம் அரசிளங் குமரன் ஆரும்இல் ஒருசிறை ஒருதனி நின்றாய் உன்திறம் அறிந்தேன். வளர்இள வனமுலை மடந்தை மெல்இயல் தளர்இடை அறியும் தன்மையள் கொல்லோ விளையா மழலை விளைந்து மெல்இயல் முளைஎயிறு அரும்பி முத்துநிரைத் தனகொல் செங்கயல் நெடுங்கண் செவிமருங்கு ஓடி வெங்கணை நெடுவேள் வியப்புஉரைக் கும்கொல் மாதவர் உறைவிடம் ஒரீஇமணி மேகலை தானே தமியள்இங்கு எய்தியது உரைஎனப், பொதிஅறைப் பட்டோர் போன்றுஉளம் வருந்தி மதுமலர்க் கூந்தல் சுதமதி உரைக்கும் இளமை நாணி முதுமை எய்தி உரைமுடிவு காட்டிய |