மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   560
Zoom In NormalZoom Out

மால் இளங்கோ முன்என். இளங்கோன் கண்ட இளம்பொன் பூங்கொடி
விளங்குஒளி மேனி விண்ணவர் வியப்பப்
பொருமுகப் பளிங்கின் எழினி வீழ்த்துத்
திருவின் செய்யோள் ஆடிய பாவையின்
விரைமலர் ஐங்கணை மீன விலோதனத்து
உருவி லாளனொடு உருவம் பெயர்ப்ப
ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன்
காவியங் கண்ணி ஆகுதல் தெளிந்து
தாழ்ஒளி மண்டபம் தன்கையில் தடைஇச்
சூழ்வோன் சுதமதி தன்முகம் நோக்கிச்
சித்திரக் கைவினை திசைதொறும் செறிந்தன
எத்திறத் தாள்நின் இளங்