மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   563
Zoom In NormalZoom Out

தணர்க்கு ஒவ்வேன் ஆயினும்
காதலன் ஆதலின் கைவிட லீயான்
இரந்து ஊண் தலைக்கொண்டு இந்நகர் மருங்கில்
பரந்துபடு மனைதொறும் திரிவோன் ஒருநாள்
புனிற்றுஆப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன்
கணவிரி மாலை கைக்கொண் டென்ன
நிணம்நீடு பெருங்குடர் கையகத்து ஏந்தி
என்மகள் இருந்த இடமென்று எண்ணித்
தன்உறு துன்பம் தாங்காது புகுந்து
சமணீர் காள்நும் சரண்என் றோனை
இவண்நீர் அல்லஎன்று என்னொடும் வெகுண்டு
மைஅறு படிவத்து மாதவர் புறத்துஎமைக்
கைஉதிர்க் கோடலின் கண்நிறை நீரேம்
அறவோர் உளீரோ ஆரும்இ லோம்எனப்
புறவோர் வீதியில் புலம்பொடு சாற்ற
மங்குல்தோய் மாடம் மனைதொறும் புகூஉம்
அங்கையில்