மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   565
Zoom In NormalZoom Out

திறப்பட உருட்டிக்
காமன் கடந்த வாமன் பாதம்
தகைபா ராட்டுதல் அல்லது யாவதும்
மிகைநா இல்லேன் வேந்தே வாழ்கென
அம்சொல் ஆயிழை நின்திறம் அறிந்தேன்
வஞ்சி நுண்இடை மணிமே கலைதனைச்
சித்திரா பதியால் சேர்தலும் உண்டுஎன்று
அப்பொழில் ஆங்குஅவன் அயர்ந்து போயபின்
பளிக்குஅறை திறந்து பனிமதி முகத்துக்
களிக்கயல் பிறழாக் காட்சியள் ஆகிக்
கற்புத் தான்இலள் நல்தவ உணர்வுஇலள்
வருணக் காப்புஇலள் பொருள்விலை யாட்டிஎன்று
இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது
புதுவோன் பின்றைப் போனதுஎன் நெஞ்சம்
இதுவோ அன்னாய் காமத்து இயற்கை
இதுவே ஆயின் கெடுகதன் திறம்என
மதுமலர்க் குழலாள் மணிமே கலைதான்
சுதமதி தன்னொடு நின்ற எல்லையுள்
இந்திர