| கோடணை விழாஅணி விரும்பி வந்து காண்குறூஉம் மணிமே கலாதெய்வம் பதியகத்து உறையும்ஓர் பைந்தொடி ஆகி மணிஅறைப் பீடிகை வலம்கொண்டு ஓங்கிப் புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன் உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய் முற்ற உணர்ந்த முதல்வா என்கோ காமன் கடந்தோய் ஏமம் ஆயோய் தீநெறிக் கடும்பகை கடிந்தோய் என்கோ ஆயிர ஆரத்து ஆழியன் திருந்தடி நாஆ யிரம்இலேன் ஏத்துவது எவன்என்று எரிமணிப் பூங்கொடி இருநில மருங்குவந்து ஒருதனி திரிவதுஒத்து ஓதியின் ஒதுங்கி நிலவரை இறந்துஓர் முடங்குநா நீட்டும் புலவரை இறந்த புகார்எனும் பூங்கொடி பன்மலர் சிறந்த நல்நீர் அகழிப் |