மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   567
Zoom In NormalZoom Out

புள்ஒலி சிறந்த தெள்அரிச் சிலம்புஅடி
ஞாயில் இஞ்சி நகைமணி மேகலை
வாயில்மருங்கு இயன்ற வான்பணைத் தோளி
தருநிலை வச்சிரம் எனஇரு கோட்டம்
எதிர்எதிர் ஓங்கிய கதிர்இள வனமுலை
ஆர்புனை வேந்தற்குப் பேரளவு இயற்றி
ஊழி எண்ணி நீடுநின்று ஓங்கிய
ஒருபெருங் கோயில் திருமுக வாட்டி
குணதிசை மருங்கில் நாண்முதிர் மதியமும்
குடதிசை மருங்கில் சென்றுவீழ் கதிரும்
வெள்ளிவெண் தோட்டொடு பொன்தோ டாக
எள்அறு திருமுகம் பொலியப் பெய்தலும்
அன்னச் சேவல் அயர்ந்துவிளை யாடிய
தன்உறு பெடையைத் தாமரை அடக்கப்
பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்டு
ஓங்குஇருந் தெங்கின் உயர்மடல் ஏற
அன்றில் பேடை அரி