மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   568
Zoom In NormalZoom Out

க்குரல் அழைஇச்
சென்றுவீழ் பொழுது சேவற்கு இசைப்பப்
பவளச் செங்கால் பறவைக் கானத்துக்
குவளை மேய்ந்த குடக்கண் சேதா
முலைபொழி தீம்பால் எழு துகள் அவிப்பக்
கன்றுநினை குரல மன்றுவழிப் படர
அந்தி அந்தணர் செந்தீப் பேணப்
பைந்தொடி மகளிர் பலர்விளக்கு எடுப்ப
யாழோர் மருதத்து இன்னரம் புளரக்
கோவலர் முல்லைக் குழல்மேல் கொள்ள
அமரக மருங்கில் கணவனை இழந்து
தமரகம் புகூஉம் ஒருமகள் போலக்
கதிர்ஆற்றுப் படுத்த முதிராத் துன்பமோடு
அந்தி என்னும் பசலைமெய் யாட்டி
வந்துஇறுத் தனளால் மாநகர் மருங்குஎன்.
மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை
 
முற்றிற்று.