மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   570
Zoom In NormalZoom Out

றனன் ஆயினும்
புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான்
பெருந்தெரு ஒழித்துஇப் பெருவனம் சூழ்ந்த
திருந்துஎயில் குடபால் சிறுபுழை போகி
மிக்க மாதவர் விரும்பினர் உறையும்
சக்கர வாளக் கோட்டம் புக்கால்
கங்குல் கழியினும் கடுநவை எய்தாது
அங்குநீர் போம்என்று அருந்தெய்வம் உரைப்ப
வஞ்ச விஞ்சையன் மாருத வேகனும்
அம்செஞ் சாயல் நீயும் அல்லது
நெடுநகர் மருங்கின் உள்ளோர் எல்லாம்
சுடுகாட்டுக் கோட்டம் என்றுஅலது உரையார்
சக்கர வாளக் கோட்டம் அஃதுஎன
மிக்கோய் கூறிய உரைப்பொருள் அறியேன்
ஈங்குஇதன் காரணம் என்னை யோஎன
ஆங்குஅதன் காரணம் அறியக் கூறுவன்
மாதவி மகளொடு வல்இருள் வரினும்
நீகேள் என்றே நேர்இழை கூறு