மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   571
Zoom In NormalZoom Out

ம்இந்
நாமப் பேரூர் தன்னொடு தோன்றிய
ஈமப் புறங்காடு ஈங்குஇதன் அயலது
ஊரா நல்தேர் ஓவியப் படுத்துத்
தேவர் புகுதரூஉம் செழுங்கொடி வாயிலும்
நெல்லும் கரும்பும் நீரும் சோலையும்
நல்வழி எழுதிய நலங்கிளர் வாயிலும்
வெள்ளி வெண்சுதை இழுகிய மாடத்
துள்உரு எழுதா வெள்ளிடை வாயிலும்
மடித்த செவ்வாய்க் கடுத்த நோக்கின்
தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து
நெடுநிலை மண்ணீடு நின்ற வாயிலும்
நால்பெரு வாயிலும் பால்பட்டு ஓங்கிய
காப்புஉடை இஞ்சிக் கடிவழங்கு ஆர்இடை
உலையா உள்ளமோடு உயிர்க்கடன் இறுத்தோர்
தலைதூங்கு நெடுமரம் தாழ்ந்துபுறம் சுற்றிப்
பீடிகை ஓங்கிய பெரும்பலி முன்றில்
காடுஅமர் செல்வி கழிபெருங் கோட்டமும்
அருந்தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆய