மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   572
Zoom In NormalZoom Out

ஒருங்குஉடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும்
நால்வேறு வருணப் பால்வேறு காட்டி
இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த
குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன
சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்
அருந்திறல் கடவுள் திருந்துபலிக் கந்தமும்
நிறைக்கல் தெற்றியும் மிறைக்களச் சந்தியும்
தண்டும் மண்டையும் பிடித்துக் காவலர்
உண்டுகண் படுக்கும் உறையுள் குடிகையும்
தூமக் கொடியும் சுடர்த்தோ ரணங்களும்
ஈமப் பந்தரும் யாங்கணும் பரந்து
சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர்
தாழ்வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர்
இரவும் பகலும் இளிவுடன் தரியாது
வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும்
எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி
நெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓ