மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   573
Zoom In NormalZoom Out

சையும்
துறவோர் இறந்த அழுவிளிப் பூசலும்
பிறவோர் இறந்த அழுவிளிப் பூசலும்
நீள்முக நரியின் தீவிளிக் கூவும்
சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும்
புலவுஊண் பொருந்திய குராலின் குரலும்
ஊண்தலை துற்றிய ஆண்டலைக் குரலும்
நல்நீர்ப் புணரி நளிகடல் ஓதையின்
இன்னா இசையொலி என்றும்நின்று அறாது
தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஒங்கிக்
கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து
காய்பசிக் கடும்பேய் கணங்கொண்டு ஈண்டும்
மால்அமர் பெருஞ்சினை வாகை மன்றமும்
வெள்நிணம் தடியொடு மாந்தி மகிழ்சிறந்து
புள்இறை கூரும் வெள்ளில் மன்றமும்,
சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு
மடைதீ யுறுக்கும் வன்னி மன்றமும்,
விரத யாக்கையர் உடைதலை தொகுத்துஆங்கு
இருந்தொடர்