மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   574
Zoom In NormalZoom Out

ப் படுக்கும் இரத்தி மன்றமும்
பிணம்தின் மாக்கள் நிணம்படு குழிசியில்
விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும்
அழல்பெய் குழிசியும் புழல்பெய் மண்டையும்
வெள்ளில் பாடையும் உள்ளீட்டு் அறுவையும்
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும்
நெல்லும் பொரியும் சிம்பலி அரிசியும்
யாங்கணும் பரந்த ஓங்குஇரும் பறந்தலை
தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர்
ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்
முதியோர் என்னான் இளையோர் என்னான்
கொடுந்தொழி லாளன் கொன்றனன் குவிப்பஇவ்
அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்
கழிபெருஞ் செல்வக் கள்ளாட்டு அயர்ந்து
மிக்க நல்லறம் விரும்பாது வாழும்
மக்களில் சிறந்த மடவோர் உண்டோ?
ஆங்குஅது தன்னைஓர் அருங்கடி நகர்எனச்
சார்ங்கல்