| இறைஞ்சிய இளங்கொடி தன்னை வாழ்த்தி அறம்திகழ் நாவின் அறவணன் உரைப்போன் வென்வேல் கிள்ளிக்கு நாகநாடு ஆள்வோன் தன்மகள் பீலி வளைதான் பயந்த புனிற்றுஇளங் குழவியைத் தீவகம் பொருந்தித் தனிக்கலக் கம்பளச் செட்டிகைத் தரலும் வணங்கிக் கொண்டுஅவன் வங்கம் ஏற்றிக் கொணர்ந்திடும் அந்நாள் கூர்இருள் யாமத்து அடைகரைக்கு அணித்தா அம்பி கெடுதலும் மரக்கலம் கெடுத்தோன் மைந்தனைக் காணாது அரைசற்கு உணர்த்தலும் அவன்அயர் வுற்று விரைவனன் தேடி விழாக்கோள் மறப்பத் தன்விழாத் தவிர்தலின் வானவர் தலைவன் நின்உயிர்த் தந்தை நெடுங்குலத்து உதித்த மன்உயிர் முதல்வன் மகர வேலையுள் முன்னிய வங்கம் முங்கிக் கேடுறப் பொன்னின் ஊசி பசுங்கம் பளத்துத் துன்னியது என்னத் தொடுகடல் உழந்துழி எழுநாள் எல்லை இடுக்கண்வந்து எய்தா வழுவாச் சீலம் வாய் |