மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   773
Zoom In NormalZoom Out

றில்
பக்கம் இம்மலை நெருப்புஉடைத்து என்றல்
புகைஉடைத் தாதலால் எனல்பொருந்து ஏது
வகைஅமை அடுக்களை போல்திட் டாந்தம்
உபநயம் மலையும் புகைஉடைத்து என்றல்
நிகமனம் புகைஉடைத் தேநெருப்பு உடைத்துஎனல்
நெருப்புடைத் தல்லாது யாதொன்று அதுபுகைப்
பொருத்தம் இன்று புனல்போல் என்றல்
மேவிய பக்கத்து மீட்சி மொழியாய்
வைதன் மியதிட் டாந்தம் ஆகும்
தூய காரிய ஏதுச் சுபாவம்
ஆயின் சத்தம் அநித்தம் என்றல்
பக்கம் பண்ணப் படுத லால்எனல்
பக்க தன்ம வசனம் ஆகும்
யாதொன்று யாதொன்று பண்ணப் படுவது
அநித்தம் கடம்போல் என்றல் சபக்கத்
தொடர்ச்சி யாதொன்று அநித்தம்அல் லாதது
பண்ணப் படாதது ஆகாசம் போல்எனல்
விபக்கத் தொடர்ச்சி மீட்சிமொ