மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   774
Zoom In NormalZoom Out

ழி என்க
அநன்னு வயத்தில் பிரமாணம் ஆவது
இவ்வெள் ளிடைக்கண் குடம்இலை என்றல்
செவ்விய பக்கம் தோன்றாமை யில்எனல்
பக்க தன்ம வசனம் ஆகும்
இன்மையின் கண்டிலம் முயல்கோடு என்றல்
அந்நெறிச் சபக்கம் யாதொன்று உண்டுஅது
தோற்றரவு அடுக்கும் கைந்நெல்லி போல்எனல்
ஏற்ற விபக்கத்து உரைஎனல் ஆகும்
இவ்வகை ஏதுப் பொருள்சா திப்பன
என்னைகா ரியம்புகை சாதித்தது என்னில்
புகைஉள இடத்து நெருப்புஉண்டு என்னும்
அன்னுவயத் தாலும் நெருப்புஇலா இடத்துப்
புகையில்லை என்னும் வெதிரேகத் தாலும்
புகைஇ நெருப்பைச் சாதித்தது என்னில்
நேரிய புகையில் நிகழ்ந்துஉண் டான
ஊர்த்தச் சாமம் கௌடிலச் சாமம்
வாய்த்த நெருப்பின்வரு காரியம் ஆதலின்
மேல்நோக் கிக்கறுத்து இருப்பபகைத்து இருப்ப
தாமே நெருப்பைச் சாதிக்க வேண்டும்