மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   775
Zoom In NormalZoom Out

அன்னு வயம்சா திக்கின் முன்னும்
கழுதை யையும் கணிகை யையும்
தம்மில் ஒருகா லத்துஓர் இடத்தே
அன்னு வயம்கண் டான்பிற் காலத்துக்
கழுதையைக் கண்ட இடத்தே கணிகையை
அனுமிக்க வேண்டும் அதுகூ டாநெருப்பு
இலாஇடத் துப்புகை இலைஎன நேர்அத்
திருத்தகு வெதிரேகம் சாதிக்கும் என்னில்
நாய்வால் இல்லாக் கழுதையின் பிடரின்
நரிவாலும் இலையாகக் காணப் பட்ட
அதனையே கொண்டு பிறிதுஓர் இடத்து
நரிவாலி னால்நாய் வாலைஅனு மித்தல்
அரிதாம் அதனால் அதுவும்ஆ காது
ஒட்டிய உபநயம் நிகமனம் இரண்டும்
திட்டாந் தத்தி லேசென்று அடங்கும்
பக்கம் ஏதுத் திட்டாந் தங்கள்
ஒக்க நல்லவும் தீயவும் உளஅதில்
வெளிப்பட் டுள்ள தன்மி யினையும்
வெளிப்பட் டுளசாத் தியதன் மத்திறம்
பிறிதில் வேறாம் வேறுபாட் டினையும்
தன்கண் சார்த்திய நயம்தருதல் உ