| டையது நன்குஎன் பக்கம்என நாட்டுக அதுதான் சத்தம் அநித்தம் நித்தம்என்று ஒன்றைப் பற்றி நாட்டப் படுவது தன்மி சத்தம் சாத்திய தன்ம மாவது நித்தா நித்தம் நிகழும்நல் ஏது மூன்றாய்த் தோன்றும் ஒழிந்த பக்கத்து ஊன்றி நிற்றலும் சபக்கத்துஉண் டாதலும் விபக்கத்து இன்றியே விடுதலும் சபக்கம் சாதிக் கின்பொருள் தன்னால் பக்கத்து ஓதிய பொதுவகை ஒன்றி இருத்தல் சத்த அநித்தம் சாத்தியம் ஆயின் ஒத்த அநித்தம் கடாதி போல்எனல் விபக்கம் விளம்பில் யாதொன்று யாதொன்று அநித்தம்அல் லாதது பண்ணப் படாதது ஆஅ காசம் போல்என்று ஆகும் பண்ணப் படுதலும் செயலிடைத் தோன்றலும் நண்ணிய பக்கம் சபக்கத் திலுமாய் விபக்கத்து இன்றி அநித்தத் தினுக்கு மிகத்தரும் ஏதுவாய் விளங்கிற்று என்க ஏதம்இல் திட்டாந் தம்இரு வகைய சாதன் மியம்வை தன்மி யம்எனச் சாதன் மியம்எனப் படுவ |