மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   778
Zoom In NormalZoom Out

ன்றே இயம்பல்
உலக விருத்தம் உலகின்மாறு ஆம்உரை
இலகுமதி சந்திரன் அல்ல என்றல்
ஆகம விருத்தம்தன் நூல்மாறு அறைதல்
அநித்த வாதியாய் உள்ளவை சேடிகன்
அநித்தி யத்தைநித் தியம்என நுவறல்
அப்பிர சித்த விசேடணம் ஆவது
தத்தம் எதிரிக்குச் சாத்தியம் தெரியாமை
பௌத்தன் மாறாய் நின்றசாங் கியனைக்
குறித்துச் சத்தம் விநாசி என்றால்
அவன்அவி நாச வாதி ஆதலின்
சாத்திய விநாசம்அப் பிரசித்தம் ஆகும்
அப்பிர சித்த விசேடியம் ஆவது
எதிரிக்குத் தன்மி பிரசித்தம் இன்றி
இருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற
பௌத்தனைக் குறித்துஆன் மாச்சை தனியவான்
என்றால் அவன்அ நான்ம வாதி
ஆதலில் தன்மி அப்பிர சித்தம்
அப்பிர சித்த உபயம் ஆவது
மாறுஆ னோரக்குத் தன்மி சாத்தியம்
ஏறாது அப்பிர சித்தமாய் இருத்தல்
பகர்வை சேடிகன் பௌத்தனைக் குறித்துச்
சுகம்முத லியதொகைப் பொருட்குக் காரணம்
ஆன்மா என்றால் சுகமும்ஆன் மாவும்
தாம்இசை யாமையில் அப்பிரசித் தோ