| கா திகளில் சுகத்து நிகழ்ந்து கடத்துஒழிந் தமையினும் ஏகதே சத்து நிகழ்வதுஏ காந்தம்அன்று அமூர்த்தம் ஆகாசம் போல நித்தமோ அமூர்த்த சுகம்போல் அநித்த மோஎனல் விருத்த வியபிசாரி திருந்தா ஏதுவாய் விருத்த ஏதுவிற் கும்இடம் கொடுத்தல் சத்தம் அநித்தம் செயல்இடைத் தோன்றலின் ஒத்த தெனினச் செயலிடைத் தோன்றற்குச் சபக்கமாய் உள்ள கடாதி நிற்கச் சத்தம் நித்தம் கேட்கப் படுதலில் சத்தத் துவம்போல் எனச்சாற் றிடுதல் இரண்டினும் சங்கயமாய் ஏகாந்தம் அல்ல விருத்தம் தன்னைத் திருத்தக விளம்பில் தன்மச் சொரூப விபரீத சாதனம் தன்ம விசேட விபரீத சாதனம் தன்மிச் சொரூப விபரீத சாதனம் தன்மி விசேட விபரீத சாதனம் என்ன நான்கு வகையது ஆகும்அத் தன்மச் சொரூப விபரீத சாதனம் சொன்ன ஏதுவில் சாத்திய தன்மத்து உருவம் கெடுதல் சத்தம் நித்தம் பண்ணப் படுதலின் என்றால் பண்ணப் படுவ |