| வே றாதலால் சாமா னியவிசே டம்போல் என்றால் பொருளும் குணமும் கருமமும் ஒன்றாய் நின்றவற் றின்இடை உண்மைவே றாதலால் என்று காட்டப் பட்ட ஏது மூன்றினுடை உண்மை வேறு படுத்தும் பொதுவாம் உண்மை சாத்தியத்து இல்லா மையினும் திட்டாந் தத்தில் சாமானியம் விசேடம் போக்கிப் பிறிதுஒன்று இல்லாமை யானும் பாவம் என்று பகர்ந்ததன் மியினை அபாவம் ஆக்குத லான்விப ரீதம் தன்மி விசேட விபரீத சாதனம் தன்மி விசேட அபாவம் சாதித்தல் முன்னம் காட்டப் பட்ட ஏதுவே பாவமா கின்றது கருத்தா வுடைய கிரியையும் குணமும்ஆம் அதனை விபரீதம் ஆக்கியது ஆதலால் தன்மி விசேடம் கெடுத்தது தீய எடுத்துக்காட்டு ஆவன தாமே திட்டாந்த ஆபா சங்கள் திட்டாந் தம்இரு வகைப்படும் என்றுமுன் கூறப் பட்டன |