மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   785
Zoom In NormalZoom Out

தன் மியதிட் டாந்தஆ பாசம்
ஓதில் ஐந்து வகைஉள தாகும்
சாதன தன்ம விகலமும் சாத்திய
தன்ம விகலமும் உபய தன்ம
விகலமும் அநன்னு வயவிப ரீதான்
னுவயம் என்ன வைதன் மியதிட்
டாந்த ஆபா சமும்ஐ வகைய
சாத்தி யாவி யாவி ருத்தி
சாத னாவி யாவி ருத்தி
உபயாவி யாவிருத்தி அவ்வெதி ரேகம்
விபரீத வெதிரேகம் என்ன இவற்றுள்
சாதன தன்ம விகலம் ஆவது
திட்டாந் தத்தில் சாதனம் குறைவது
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான்
யாதொன்று யாதொன்று அமூர்த்தம்அது நித்தம்
ஆதலால் காண்புற்றது பரமாணு வில்எனில்
திட்டாந்த தப்பர மாணு
நித்தத் தோடு அமூர்த்தம் ஆதலால்
சாத்திய தன்ம நித்தத்துவம் நிரம்பிச்
சாதன தன்மஅமூர்த் தத்துவம் குறையும்
சாத்திய தன்மம் விகலம் ஆவது
காட்டப் பட்ட திட்டாந் தத்தில்
சாத்திய தன்மம் குறைவு படுதல்
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலால்
யாதொன்று யாதொன்று அமூர்த்