| கொள்ளும் இரண்டும் குறையக் காட்டுதல் சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான் யாதொன்று யாதொன்று அமூர்த்தம்அது நித்தம் கடம்போல் எனில்திட் டாந்த மாகக் காட்டப் பட்டகடம் தான்உண் டாகிச் சாத்திய மாயுள நித்தம் துவமும் சாதன மாயுள அமூர்த்தத் துவமும் குறையும் அசன்னா உள்ள உபயதன்ம விகலம் இல்லாப் பொருள்கண் சாத்திய சாதனம் என்னும் இரண்டும் குறையக் காட்டுதல் சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான் யாதொன்று யாதொன்று மூர்த்தம்அது அநித்தம் ஆகாசம் போல்எனும் திட்டாந் தத்துச் சாத்திய தன்மமாய் உள்ள அநித்தமும் சாதன தன்மமாய் உள்ள மூர்த்தமும் இரண்டும் ஆகாசம் அசத்துஎன் பானுக்கு அதன்கண் இன்மை யானே குறையும் உண்டுஎன் பானுக்கு ஆகாசம் நித்தம் அமூர்த்தம் ஆதலால் அவனுக்கும் குறையும் அநன்னுவயம் ஆவது சாதன சாத்தியம் தம்மின் கூட்ட மாத்திரம்சொல் லாதே இரண்ட னுடைய உண்மையைக் காட்டுதல் சத்தம் அநித்தம் கிருத்தம் ஆதலின் யாதொன்று யாதொன்று கிருத்தம்அது அநித்தம்எனும் அன்னுவயம் சொல்லாது குடத்தின் கண்ணே கிருத்த அநித்தம் காணப் பட்ட என்றால் அன்னுவயம் தெரியா தாகும் விபரீதான் னுவயம் வியாபகத் துடைய அன்னுவயத் தாலே வியாப்பியம் விதித்தல் சத்தம் அநித்தம் கிருத்தத் தால்எ |