மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   788
Zoom In NormalZoom Out

யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தம்என
வியாபகத் தால்வியா பகத்தைக் கருதாது
யாதொன்று யாதொன்று அநித்தம்அது கிருத்தம்என
வியாபகத் தால்வியாப் பியத்தைக் கருதுதல்
அப்படிக் கருதின் வியாபகம் வியாப்பியத்தை
இன்றியும் நிகழ்த லின்விப ரீதமாம்
வைதன்மிய திட்டாந் தத்துச்
சாத்தி யாவியா விருத்தி யாவது
சாதன தன்மம் மீண்டு
சாத்திய தன்மம் மீளாது ஒழிதல்
சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால்
யாதொன்று யாதொன்று நித்தமும் அன்றுஅது
அமூர்த்தமும் அன்று பரமாணுப் போல்எனின்
அப்படித் திட்டாந்த மாகக் காட்டப் பட்ட
பரமாணு நித்தமாய் மூர்த்தம் ஆதலின்
சாதன அமூர்த்தம் மீண்டு
சாத்திய நித்தம் மீளாது ஒழிதல்
சாத னாவியா விருத்தி யாவது
சாத்திய தன்மம் மீண்டு
சாதன தன்மம் மீளாது ஒழிதல்
சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால்
யாதொன்று யாதொ