| லான் என்னின் வெதிரே கம்தெரி யாது விபரீத வெதிரேகம் ஆவது பிரிவைத் தலைதடு மாறாச் சொல்லுதல் சத்தம் நித்தம் மூர்த்தம் ஆதலின் என்றால் என்று நின்ற இடத்து யாதோர் இடத்து நித்தமும் இல்லைஅவ் விடத்து மூர்த்தமும் இல்லை எனாதே யாதோர் இடத்து மூர்த்தமும் இல்லைஅவ் விடத்து நித்தமும் இல்லை என்றால் வெதிரேகம் மாறு கொள்ளும்எனக் கொள்க நாட்டிய இப்படித் தீயசா தனத்தால் காட்டும் அனுமான ஆபா சத்தின் மெய்யும் பொய்யும் இத்திற விதியால் ஐயம் இன்றி அறிந்துகொள் ஆய்ந்துஎன். தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை முற்றிற்று. |