மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   792
Zoom In NormalZoom Out

தானம் தாங்கிச் சீலந் தலைநின்று
போன பிறப்பில் புகுந்ததை உணர்ந்தோள்
புத்த தன்ம சங்கம் என்னும்
முத்திற மணியை மும்மையின் வணங்கிச்
சரணா கதியாய்ச் சரண்சென்று அடைந்தபின்
முரணாத் திருவற மூர்த்தியை மொழிவோன்
அறிவு வறிதாய் உயிர்நிறை காலத்து
முடிதயங்கு அமரர் முறைமுறை இரப்பத்
துடித லோகம் ஒழியத் தோன்றிப்
போதி மூலம் பொருந்தி இருந்து
மாரனை வென்று வீரன் ஆகிக்
குற்றம் மூன்றும் முற்ற அறுக்கும்
வாமன் வாய்மை ஏமக் கட்டுரை
இறந்த காலத்து எண்ணில்புத் தர்களும்
சிறந்துஅருள் கூர்ந்து திருவாய் மொழிந்தது
ஈரறு பொருளின் ஈந்தநெறி உடைத்தாய்ச்
சார்பின் தோன்றித் தத்தமில் மீட்டும்
இலக்கணத் தொடர்தலின்
மண்டில வகையாய் அறியக் காட்டி
எதிர்முறை ஒப்ப மீட்சியும் ஆகி
ஈங்குஇது இல்லா வழிஇல் லாகி
ஈங்குஇது உள்ள வழிஉண் டாகலில்
தக்க தக்க சார்பில் தோற்றம்எனச்
சொற்றகப் பட்டும் இலக்கணத் தொடர்பால்
கருதப் பட்டும்