மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   794
Zoom In NormalZoom Out

ம் வீடும்
இனையன எல்லாம் தானே ஆகிய
பேதைமை செய்கை உணர்வே அருவுரு
வாயில் ஊறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்
இற்றுஎன வகுத்த இயல்புஈ ராறும்
பிறந்தோர் அறியின் பெரும்பேறு அறிகுவர்
அறியார் ஆயின் ஆழ்நரகு அறிகுவர்
பேதைமை என்பது யாதுஎன வினவின்
ஓதிய இவற்றை உணராது மயங்கி
இயற்படு பொருளால் கண்டது மறந்து
முயல்கோடு உண்டுஎனக் கேட்டது தெளிதல்
உலகம் மூன்றினும் உயிராம் உலகம்
அலகில பல்உயிர் அறுவகைத்து ஆகும்
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்
தொக்க விலங்கும் பேயும் என்றே
நல்வினை தீவினை என்றுஇரு வகையால்
சொல்லப் பட்ட கருவில் சார்தலும்
கருவில் பட்ட பொழு