| கவலையும் காட்டும் தீவினை என்பது யாதுஎன வினவின் ஆய்தொடி நல்லாய் ஆங்குஅது கேளாய் கொலையே களவே காமத் தீவிழை உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும் பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல்எனச் சொல்லிற் தோன்றுவ நான்கும் வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சிஎன்று உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும்எனப் பத்து வகையால் பயன்தெரி புலவர் இத்திறம் படரார் படர்குவர் ஆயின் விலங்கும் பேயும் நரகரும் ஆகிக் கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர் நல்வினை என்பது யாதுஎன வினவின் சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச் சீலம் |