| தருமுறை இதுஎனத் தாம்தாம் சார்தல் பிறப்புஎனப் படுவதுஅக் கருமப் பெற்றியின் உறப்புணர் உள்ளம் சார்பொடு கதிகளில் காரண காரிய உருக்களில் தோன்றல் பிணிஎனப் படுவது சார்பில் பிறிதாய் இயற்கையின் திரிந்துஉடம்பு இடும்பை புரிதல் மூப்புஎன மொழிவது அந்தத்து அளவும் தாக்குநிலை யாமையின் தாம்தளர்ந் திடுதல் சாக்காடு என்பது அருவுருத் தன்மை யாக்கை வீழ்கதிர் எனமறைந் திடுதல் பேதைமை சார்வாச் செய்கை ஆகும் செய்கை சார்வா உணர்ச்சி ஆகும் உணர்ச்சி சா |