| பிறப்பில் உழக்குபயன் ஆதலின் பிறப்பின் முதல்உணர்வு ஆதிச் சந்தி நுகர்ச்சி ஒழுக்கொடு விழைவின் கூட்டம் புகர்ச்சிஇன்று அறிவது இரண்டாம் சந்தி கன்மக் கூட்டத் தொடுவரு பிறப்பிடை முன்னிச் செல்வது மூன்றாம் சந்தி மூன்றுவகைப் பிறப்பு மொழியுங் காலை ஆன்றபிற மார்க்கத்து ஆய உணர்வே தோன்றல் வீடுஎனத் துணிந்து தோன்றியும் உணர்வுள் அடங்க உருவாய்த் தோன்றியும் உணர்வும் |