பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   22
Zoom In NormalZoom Out


 

தழுவோள்
பெண்ணிலி கொல்லோ பெரியோர்ப் பிழைப்பதோர்
கண்ணிலி யாகுமிக் கணிகை மகளெனக்
கூத்தி மருங்கிற் குணம்பழிப் போரும்
ஆற்றற் கொற்றமொ டரசுவழி வந்ததன்
காத்துயர் தொல்குடிக் கதுவா யாகப்
பண்பில் சிறுதொழில் பயின்றதை யன்றியும்
தன்னொடு படாளைத் தானயந் தரற்றிக்
கண்ணற் றனனாற் காவலன் மகனென
அண்ணன் மருங்கி னறிவிழிப் போரும்
எள்ளியு மிழித்து மின்னவை பயிற்றி
முள்ளெயி றிலங்கு மொள்ளமர் முறுவலர்
பட்டி மாக்கள் கட்டுரை பகரும்
பெருங்கலி யாவணம் பிற்படப் போஒம்
வையத் தவளொடும் வயந்தகன் கேட்பத்
தேன்கவர் வோப்பித் திருநுதல் சுருக்கிப்
பூநறுந் தேறல் பொலன்வள்ளத் தேந்தி
ஒழுகி நிலம்பெறாஅ தொசிந்து கடைபுடைத்
தெழுதுநுண் புருவ மேற்றி யியைவித்
திலமலர்ச் செவ்வா யொப்ப விதழ்விடுத்து
நரம்பிசை தள்ளி வறிதினிற் சுவைத்து
மகிழின் மம்ம ரெய்தி முகிழின்
கால மன்றியுங் கையி னெரித்த
கழுநீர்க் குவளைப் பெரும்பொதி யவிழ்ந்த
வள்ளிதழ் வகைய வாகி யொள்ளிதழ்
செஞ்சிவப் புறுத்த சிதரரி மழைக்கண்
கொழுங்கடை யிடுக நோக்கி மணிபிறழ
விருப்புள் கூர விம்மி வெய்துயிர்த்
தெருத்தஞ் சிறிய கோட்டி யெம்மினும்
திருத்தஞ் சான்றநுந் துணைவியில் செல்கெனப்
புலவித் தண்டந் தமர்வயி னேற்றி
இல்லை யாயினுஞ் சொல்வகை செருக்கித்
தண்டிக் கொண்டு பெண்டிரைப் பொறாது
செயிர்வுள் ளுறுத்த நோக்கமொடு நறவின்
வாசங் கமழு மோசைய வாகிக்
கிளிப்பயி ரன்ன களிப்பயின் மழலை
எய்தா வொழுக்கமொ டைதவட் பயிற்றி
எயிறு வெளிப்படா திறைஞ்சி ஞிமிறினம்
மூசின கரிய கோதையிற் புடைத்துப்
பூங்குழை