பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   23
Zoom In NormalZoom Out


 

மகளிர் புலவிகொ டிருமுகம்
தேர்ந்துணர் காட்சியிற் றிரிந்துநலங் கரியப்
பூந்துகிற் றானை பற்றிக் காய்ந்தது
காட்டினை சென்மோ மீட்டின தெளிகெனப்
படிற்றியல் களைஇப் பணிமொழிக் கிளவி
நடுக்குறு துயரமொடு நயவரப் பயிற்றிக்
குவிப்பூங் கையிணை கூப்பித் திருக்குழல்
நானப் பங்கி கரமிசைத் திவளப்
பரட்டசை கிண்கிணிப் பக்கம் புல்லி
அரத்தகத் தீரத் தைதுகொண் டெழுதிய
சீறடிச் சுவட்டெழுத் தேறிய சென்னியர்
நாட்போது நயந்த வேட்கைய வாயினும்
முகைப்பதம் பார்க்கும் வண்டினம் போலத்
தகைப்பருங் காமத்துத் தாம்வீழ் மகளிர்
நகைப்பதம் பார்க்கு நனிநா கரிகத்துச்
சொல்லி னுண்பொருள் காட்டி யில்லின்
படுகாழ்ப் படுத்துத் தேய்வை யுறீஇக்
கலுழி நீக்குங் கம்மியர் போல
மகர வீணையின் மனமாசு கழீஇ
நகர நம்பியர் திரிதரு மறுகின்
ஆணையிற் கொண்டுதன் னரசியல் செய்தோன்
காம விருந்தினன் கலையிற் கிகந்தனன்
பிழைக்கவும் பெறூஉம் பெண்டிர் மாட்டென
உரைத்தகு கிளவி யோம்பார் பயிற்றி
நடநவின் மகளிர் நலத்திடை நம்பி
விருந்தினன் போன்மெனப் புரிந்தலர் தூற்றி
விடருந் தூர்த்தரும் விட்டே றுரைப்பத்
தரும நுவலாது தத்துவ மொரீஇக்
கரும நுதலிய கள்ளக் காமம்
எத்துறை மாக்களு மெய்க்கொளப் பரப்பி
வனப்பு மிளமையும் வரம்பில் கல்வியும்
தனக்குநிக ரில்லாத் தன்மைய னாதலிற்
பொருந்தாப் புறஞ்சொ னிறம்பார்த் தெறிய
வான்மயிர் துடக்கிற் றானுயிர் வாழாப்
பெருந்தகைக் கவரி யன்ன பீடழிந்து
நெடுவெண் ணிலவி னீர்மைக் கிரங்கி
முறுவன் மகளிர் முற்ற நிற்பப்
பசுங்கதிர் சுருங்கிய பசலைத் தாகி
விசும்பெழத் தேயும் வெண்மதி