பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   24
Zoom In NormalZoom Out


 

போல
வலியிற் றீரா தொளியிற் குன்றிப்
பெருநல் கூர்ந்த பெருவரை யகலத்
தெவ்வ மறைத்தல் வேண்டி வையத்து
வலிதிற் றந்த வால்வளைப் பணைத்தோள்
ஒருமனம் புரிந்த நருமதை கேட்ப
வேட்கைக் கிளவி வெளிப்படப் பயிற்றிச்
சேட்படு குருசில் சேர்தொறும் பொறாஅள்
நச்சுயிர்ப் பளைஇய நாகம் போல
அச்சுயிர்ப் பளைஇ யமரா நோக்கமொடு
சில்லைச் சிறுசொன் மெல்லியன் மிழற்ற
அவ்விரு ளடக்கி வைகிருட் போக்கிப்
போற்றா மாக்க டூற்றும் பெரும்பழி
மேற்கொண் டனனான் மின்னிழை பொருட்டென்
மின்னிழை பொருட்டா மேலவன் கொண்ட
துன்னரும் பெரும்பழி நன்னகர் கழுமக்
கம்பலை மூதூர் வம்பல ரெடுத்த
படுசொ லொற்றர் கடிதவ ணோடி
வானுற நிவந்த வசையின் மாணகர்த்
தாம்பெறு செவ்வியுட் டலைமகற் குணர்த்தக்
காமத் தியற்கை காழ்ப்பட லுணர்ந்து
நகையு நாணுந் தொகவொருங் கெய்தி
இழிப்புறு நெஞ்சின னாயினும் யார்கணும்
பழிப்புறஞ் சொல்லாப் பண்பின னாதலின்
உருவுவழி நில்லா தாயினு மொருவர்க்குத்
திருவுவழி நிற்குந் திட்ப மாதலிற்
கேட்டது கரந்து வேட்டது பெருக்கிப்
பட்டது நாணாது பெட்டது மலையும்
கால மன்மை யல்லது காணிற்
கோல மன்றோ குமரற் கிதுவென
எள்ளியு முரையா னிளமைய தியல்பென
முள்ளெயி றிலங்கு முறுவல னாகித்
தண்கய மருங்கிற் றாமரை போல
அண்ணன் மூதூர்க் கணியெனத் தோன்றிச்
சாமரை யிரட்டையுந் தமனியக் குடையும்
மாமணி யடைப்பையு மருப்பிய லூர்தியும்
பைந்தொடி யாயமும் பட்டமு முடையோர்
ஐம்பதி னாயிர ரரங்கியன் மகளிருள்
மன்னருட் பிறந்த