பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   25
Zoom In NormalZoom Out


 

மக்களு ளருங்கலம்
தன்னயந் தரற்றத் தன்கடன் றீர்த்த
தகைசா லரிவைக்குத் தக்கன விவையென
இசைசால் சிறப்பி னிருங்கலப் பேழையொடு
மணியினும் பொன்னினு மருப்பினு மல்லது
மரத்தி னியலாத் திருத்தகு வையம்
முத்த மாலை முகமிசை யணிந்து
பொற்றார் புனைந்த புள்ளியற் பாண்டில்
கடைமணை பூட்டிக் கணிகையில் விட்டுப்
பொய்தன் மகளிரொடு புனலாட் டயரினும்
தெய்வ விழவொடு தேர்ப்பி னியலினும்
நகர்கடந் திறத்த னருமதை பெறாளென
எயின்மூ தாளரை வயின்வயி னேஎய்
வாயில் சுட்டி வளநக ரறியக்
கோயிற் கூத்துங் கொடுங்குழை யொழிகெனத்
தொன்றிய லவையத்து நன்றவட் கருளித்
தருமணற் பந்தர்த் தான்செயற் கொத்த
கரும மறுத்த கைதூ வமையத்
திருநிலத் திறைமை யேயர் பெருமகன்
பெருங்களி றடக்கிய பெறற்கரும் பேரியாழ்
கல்லா நின்றனள் கனங்குழை யோளென
எல்லா வேந்தரு மிசையின் விரும்பி
வழிமொழிக் கிளவியொடு வணக்கஞ் சொல்லிக்
கழிபெரு நன்கலங் களிற்றின்மிசை யுயரித்
துன்னருங் கோயிலுட் டூதரை விடுத்தர
ஓலையுட் பொருளு முரைத்த மாற்றமும்
நூலிய லாளரொடு நுண்ணிதிற் கேட்டு
நன்று மென்னா னன்றென மறாஅன்
மரனிவர் குரங்கின் மகக்கோட் போல
நிலைமையொடு தெரிதரு நீதிய னாகி
ஆவது துணிதுணை யாசையி னிறீஇத்
தார்கெழு வேந்தன் றமர்களை விடுத்தபின்
கோமகன் குறித்தது கொண்டுகை புனைந்து
தாய்மகட் டேரிய தன்வயி னுரைக்க
நொதுமதற் கிளவி கதுமென வெரீஇப்
புதுமரப் பாவை பொறியற் றாங்கு
விதுப்புறு நடுக்கமொடு விம்முவன ளாகி
இதுமெய் யாயி னின்னுயிர் வேண்டி
வாழ்வோ ருளரெனிற் சூழ்கதன் வினையென
ஆவி நுண்டுகில் யாப்புறுத் தாயினும்
சாவ துறுதியான் றப்பிய பின்றை
என்பிற் றீர்க வெந்தைதன் குறையென
அன்பிற் கொண்ட வரற்றுறு கிளவி
வளைக்கை நெருக்கி வாய்மிக்