கெழுதரக் கதிர்முத் தாரங் கழிவன போலச் சிதர்முத் தாலி சிதறிய கண்ணள் மாழ்குபு கலிழு மகள்வயிற் றழீஇ வீழ்தரு கண்ணீர் விரலி னீக்கிக் கவாஅற் கொண்டு காரணங் காட்டி அழேற்கென் பாவா யதுவு முண்டோ யாயு நீயும் யானு மெல்லாம் இதுமுத லாக விவ்வகை நிகழிற் றலைமகற் றுறந்து தவம்புரி வேமென அஞ்சி லோதியை நெஞ்சு வலியுறீஇச் சேயுய ருலகஞ் செம்மையிற் கூறும் தீதறு நோன்பிற் றெய்வந் தேற்றிய தீம்பாற் காட்சித் தெரிவுபல காட்டி மாற்றாக் கவலையின் மனங்கொண் டாங்கு நிறைமை சான்றநின் னெஞ்சங் கொண்ட பொறைமை காணிய பொய்யுரைத் தேனென ஓதிய நுதலு மாதரை நீவித் தக்கது நோக்கான் பெற்றது விரும்பி நுந்தை நேரா நெஞ்சுகொள் காரணம் பைந்தொடித் தோளி பரிவறக் கேளென இளமையும் வனப்பு மில்லொடு வரவும் வளமையுந் தறுகணும் வரம்பில் கல்வியும் தேசத் தமைதியு மாசில் சூழ்ச்சியோ டெண்வகை நிறைந்த நன்மகற் கல்லது மகட்கொடை நேரார் மதியோ ராதலின் அவையொருங் குடைமை யவர்வயி னின்மையின் அதுபொய் யாத லதனினுந் தேறெனக் காரணக் கிளவி நீர காட்டிச் செவிலி தெளிப்பக் கவிழ்முக மெடுத்து நெடுவெண் டானை வாங்கிக் கொண்டுதன் வடிவே லுண்கண் வருபனி யரக்கித் தோற்ற நிகர்ப்போ ரின்றி யாற்றல் காலனோ டொக்கு ஞாலப் பெரும்புகழ் புகரின் றோங்கிய நிகரில் கேள்வியன் காம நுகர்வோர்க் காரணங் காகிய ஏம வெண்குடை யேயர் மகனொடு வையக மறியக் கையகம் புக்குத் தானறி வீணை தனியிடத் தெழீஇக் காணு மென்னுங் கட்டுரை யன்றியும் உலக மாந்த ருள்ளங் கொண்ட ஐயக் கிளவி தெய்வந் தேற்றினும் தூய ளென்னாத் தீதுரை யெய்தி வாசவ தத்தையும் வாழ்ந்தன ளென்னும் ஓசை நிற்ற லுலகத் தஞ்சுவன் எமர்தர வாரா தாயினு மிவணோற் றவனுறை யுலகத் தழித்துப்பிறந் தாயினும் எய்துதல் வலித்தனென் செய்வது கேளெனத்

|