பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   28
Zoom In NormalZoom Out


 

யமுனை
இடைக்கயத் தழுந்த விடீஇய செல்வுழிப்
புனற்கரைப் படீஇயர் புதல்வரொ டார்க்கும்
தோணி யரவஞ் சேணோய்க் கிசைப்பத்
தழூஉப்புணை யாயமொடு குழூஉத்திரை மண்டி
ஆவி நுண்டுகில் யாப்புறுத் தசைத்துப்
பாகவெண் மதியிற் பதித்த குடுமிக்
களிற்றொடு புக்குக் கயங்கண் போழ்வோய்
அவ்வயி னெழுந்த கவ்வை யென்னென
முந்தை யுணர்ந்தோர் வந்துநினக் குரைப்ப
யாமுங் காண்கங் கூமின் சென்றெனக்
கோல்கொண் மள்ளர் காலி னோடி
நம்பி வேஎண் மம்பி வருகென
ஆணையிற் றிரீஇய ரஞ்சன்மி னீரெனத்
தோணி யிழிப்புழித் துடுப்புநனி தீண்டி
நெற்றி யுற்ற குற்ற மிதுவென
இதுமுத லாக வின்னே யிம்மகள்
அழிதவப் படுத லாற்றுமென் றுரைத்த
குறிகோ ளாள னறிவிகழ்ந் தெள்ளி
எல்லை ஞாயி றிரவெழு மெனினும்
பல்கதிர்த் திங்கள் பகல்படு மெனினுநின்
சொல்வரைத் தாயிற் சொல்லுவை நீயென
இன்னகை முறுவலை யாகி யிருங்களிற்
றொண்ணுதன் மத்தகத் தூன்றிய கையை
கொண்டோன் கரப்பவுங் கொள்கையி னிகப்போள்
தன்குறிப் பாயுழித் தவமிவட் கெளிதென
வம்ப மாக்கள் வாயெடுத் துரைத்த
வெஞ்சொற் கிளவிநின் னங்கையி னவித்து
வேண்டிய துரைமி னீண்டியான் றருகெனப்
புலைமக னறையப் பூசலிற் போந்தேன்
நிலைமை வேண்டியா னின்னகர் வாழ்வேன்
தலைமகன் மகனே தவமென் றுணிவென
நிகழ்வதை யுரைக்கு நிமித்திக் கஞரறப்
புகழ்வினை யாகிப் பூக்கொண் டெறிந்தபின்
மற்று மவனே கற்றது நோக்கி
யானை யணிநிழற் படுதலி னந்தணி
தான்கொண் டெழுந்த தவத்துறை நீங்கித்
தானை வேந்தன் றாணிழற் றங்கி
முற்றிழை மகளிர்க்கு முதுக ணாமெனச்
செவ்வகை யுணர்ந்தோன் சேனைக் கணிமகன்
கோசிக னென்றவன் குறிப்பெயர் கூறி
அடையாண் கிளவியொ டறியக் கூறலும்
கடிதார் மார்பனுங் கலிழ்ச்சி நோக்கிப்
பிறப்பிடை யிட்டே னாயினு மெனக்கோர்
சிறப்பின ராத றேற்றுமென் மன