பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   29
Zoom In NormalZoom Out


 

னெனக்
கண்டதற் கொண்டு தண்டா தூறுமென்
அன்புகரி யாக வறிபுதுணி கல்லேன்
இன்றிவை கரியா வினித்தெளிந் தனனென
உதயண குமர னுணர்ந்தமை தேற்றலும்
மறைமூ தாட்டி மற்றுங் கூறும்
கதிர்வினை நுனித்தநின் கணியெனைக் கூறிய
எதிர்வினை யெல்லா மெஞ்சா தெய்தி
இந்நகர்ப் பயின்றியா னிந்நிலை யெய்திற்
றென்னி னாயிற் றென்குவை யாயின்
என்முதல் கேளெனத் தொன்முத றொடங்கி
ஆக்கையி னிழிந்துநின் னருளிற் பிறந்தவென்
நோக்கரு நல்வினை நுகரிய செல்கெனக்
கொற்றவன் மகனே பற்றாது விடுவேன்
நீராட் டியலணி நின்வயி னீங்கியப்
பேர்யாற் றொருகரைப் பெயர்ந்தனென் போகிக்
கெங்கா தீரத்துத் தேசங் கெழீஇ
அங்காங் கொல்வனென் றாத்திரை முன்னி
வம்பலர் மொய்த்ததோர் வழிதலைப் பட்டு
வயிரச் சாத்தொடு வடதிசைப் போகி
அயிரிடு நெடுவழி யரசிடை யிருந்துழிப்
பூதியு மண்ணும் பொத்தகக் கட்டும்
மானுரி மடியு மந்திரக் கலப்பையும்
கானெடு மணையுங் கட்டுறுத் தியாத்த
கூறை வெள்ளுறிக் குண்டிகைக் காவினர்
தரும தருக்கர் தற்புறஞ் சூழப்
பரிபு மெலிந்த படிவப் பண்டிதன்
சாங்கிய நுனித்தவோர் சாறயர் முனிவனை
ஆங்கெதிர்ப் பட்டாங் கவனொடும் போகி
அத்தவப் பட்டாங் கறுவகைச் சமயமும்
கட்டுரை நுனித்த காட்சியே னாகி
இமயப் பொருப்பகத் தீராண் டுறைந்தபின்
குமரித் தீர்த்த மரீஇய வேட்கையின்
அருந்தவ நுனித்த வறவா சிரியன்
தருமவாத் திரையெனத் தக்கணம் போந்துழி
மாவுஞ் சேனை மதிற்புறங் கவைஇய
காள வனத்தோர் கபாலப் பள்ளியுட்
செலவயா வுயிர்த்த காலை நூற்றுறை
யாற்றுளிக் கிளந்த வறுவகைச் சமயமும்
ஏற்றல் காணுமெம் மிறைவன் றானென
மாற்றக் கோடணை மணிமுர சறைதலிற்
கற்றோர் மொய்த்த முற்றவை நடுவண்
தாழாப் பெரும்புகழ்க் காளக் கடவுண்முன்
பாலக