னென்னும் பண்ணவர் படிவத்துக் காள சமணன் காட்சி நிறுப்ப ஐம்பெருஞ் சமயமு மறந்தோற் றனவென வேந்தவ ணுதலிய வேதா சிரியரும் தாந்தம் மருங்கிற் றாழங் காட்டிச் சாங்கிய சமயந் தாங்கிய பின்னர் நல்வினை நுனித்தோ னம்மொடு வாழ்கெனப் பல்வேல் வேந்தன் பரிவுசெய் தொழுகலின் எழுந்த வாத்திரை யொழிந்தீண் டுறைவுழிக் கையது வீழினுங் கணவ னல்லது தெய்வ மறியாத் தேர்ந்துணர் காட்சிப் படிவக் கற்பிற் பலகோ மகளிருட் டொடியோ டம்மனை தோழி யெனத்தன் குடிவழி யாகக் கொண்ட கொள்கையின் இத்தவ முவக்கும் பத்தினி யாதலிற் றவஞ்சார் வாகத் தலைப்பெயல் விரும்பி அறஞ்சார் வாக வன்புசெய் தருளி இறைமக னறிய வின்றுணை யாகிப் பிறைநுதன் மாதர் பிறந்த யாண்டினுள் நாவொடு நவிலா நகைபடு மழலையள் தாய்கைப் பிரிந்துதன் றமர்வயி னீங்கி என்கைக் கிவரு மன்பின ளாதலிற் றாயென் றறிந்தன ணீயினி வளர்க்கெனக் காதல் வலையாக் கைத்தரக் கொண்டவள் பால்வகை யறிந்தபின் படர்வேன் றவமென மைத்துன மங்கை மரூஉமா கண்டு நட்புவலை யாக நங்கையொ டுறைவேன் ஒன்பதிற் றியாட்டை யுதயண கேளெனத் தன்வயிற் பட்ட தவ்வயிற் கிளரி அகம்புரி செம்மை யன்பிற் காட்டி மனமுணக் கிளந்த மந்திரக் கோட்டியுட் புள்ளு மாவு முள்ளுறுத் தியன்ற ஆண்பெயர்க் கிளவி நாண்மகிழ் கடவ வழுக்கிக் கூறினும் வடுவென நாணி ஒழுக்க நுனித்த வூராண் மகளிர் தாநயந் தரற்றினுந் தக்குழி யல்லது காமுறற் கொவ்வாக் கயக்கமி லாளநீ ஒட்டாக் கணிகையைப் பெட்டனை யென்பது புலவோர் தெரியிற் பொருத்தமின் றாகி அலவலை நீர்த்தா லத்தைநின் னலரென மற்றவள் வினவவும் பற்றிய தவிழான் பண்டறி வுண்டெனப் பகைநிலத் துறைந்த பெண்டிரைத் தெளிந்து பெருமறை யுரைத்தல் நுண்டுறை யாளர்

|